வடக்கிலிருந்து பாசிசப் புலிகளால் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டு 27 வருடங்கள்: யாழில் அனுஷ்டிப்பு

🕔 October 30, 2017
– பாறுக் ஷிஹான்-

டக்கிலிருந்து புலிகளால் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நினைவுநாளினை, இன்று திங்கட்கிழமை யாழ் ஐந்து சந்தி பகுதியில் முஸ்லிம்கள் அனுஸ்டித்தனர்.

இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள்,  ஒக்டோபர்  30ம் திகதியினை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும் அவர் கூறுகையில்;

“தமது  சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது  வாழ்ந்துவருகின்றனர்.

அவர்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும், அரசாங்க மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை  ஆறாத்துயரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே தான்  எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்