காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

🕔 October 24, 2017

காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள், தம்மரத்ன எனும் தேரர் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இவரை 07 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வனவிலங்கு திணைக்களத்தின் எலஹெர பிரதேச அலுவலக உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட தேரரை அங்கிருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிடும் அறிவித்தலை, குறித்த இடத்தில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து மேற்படி தேரர் தெரிவிக்கையில்; “அமைதியான இந்த இடம் தியானத்தில் ஈடுபடுவதற்கு நல்லது. மேலும், விலங்குகளின் தொல்லைகளும் இங்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.

ஆயினும், இந்தப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் வசிப்பதாகவும், அவை தேரருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.

அதேவேளை, இயற்கை ஒதுக்குப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்