ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அஜ்மலின் கண்டுபிடிப்புகளுக்கு விருது

🕔 October 21, 2017
– அம்ஜட் –

ரு
ஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த அஜ்மல் அஸீஸ் எனும் மாணவரின், இரண்டு புத்துருவாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

ருஹுணு பல்கலைக்கத்தினால் நடத்தப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்துருவாக்கங்களுக்கான கண்காட்சியான RIIE 2017 இல் பங்கேற்ற, அப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு மாணவர் அஜ்மலின் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

நுண்மதி பாதுகாப்புத் தொகுதி (Intelligent Security System) என்ற இவரின் கண்டுபிடிப்புக்கு சிறப்பு விருதும், மீதிறன் வழங்கி அறைக் கண்காணிப்பு கட்டுப்பாட்டுத் தொகுதி (Smart Server Room Monitoring and Controlling System) என்ற கண்டுபிடிப்புக்கு மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளது.

பரகஹதெனியவை பிறப்பிடமாகக் கொண்ட அஜ்மல் அஸீஸ்; பரகஹதெனிய தேசிய பாடசாலை மற்றும் குருநாகல் புனித ஆனா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் ஆவார்.

பன்முக ஆளுமையாக வளர்ந்து வரும் இந்த 25 வயது இளைஞர், 2014 மற்றும் 2015 ஆண்டுகளின் க.பொ.த. (உ/த) ரசாயனவியல் பல்தேர்வு வினாக்களுக்கான விளக்கவுரைகளை இலகு நடையில் எழுதி நூலுருவில் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்