உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

🕔 October 20, 2017

ள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

அம்பகமுவ மற்றும் நுவரெலிய ஆகிய பிரதேச சபைகளிலிருந்து பிரித்தெடுத்து, 04 பிரதேச சபைகளை கூடுதலாக உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்