பெண்ணாக மாறியதால், பறிபோனது தொழில்; கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

🕔 October 11, 2017

ணாக இருந்து பெண்ணாக மாறிய, கடற்படை பொறியியல் பிரிவைச் சேர்ந்த கடற்படை வீரர், அவருடைய பணியிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா – விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் கிரி என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கடற்படையின் விசாகப்பட்டினம் தளத்திலுள்ள பொறியியல் பிரிவில், மேற்படி மணீஷ் குமார் கடற்படை வீரராக கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில், கடந்த வருடம் விடுமுறையில் சென்றிருந்த மணீஷ் குமார், பணிக்குத் திரும்பியிருந்த போது, அவருடைய நடத்தையில் பல்வேறு வித்தியாசங்களை சக ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.

கடமை நேரம் தவிர்ந்த, மற்றைய பொழுதுகளில் மேற்படி நபர் – பெண்கள் போல உடையணிந்து அலங்காரம் செய்து வந்ததாகவும், இதனால், இவர் தொடர்பில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, மணீஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, மணீஷ் விடுமுறைக்காக மும்பை சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு மருத்துமனையில், பெண்ணாக மாறுவதற்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டமை தெரியவந்தது. இதனால் மணிஷை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பெண்ணாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மணீஷ் குமார், தற்போது தனது பெயரை சாபி என மாற்றியுள்ளார்.

இதேவேளை, தன்னை பணி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்