எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி

🕔 October 5, 2017

ந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி) ஒருதலைப்பட்சமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தாலும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதுள்ள விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விற்பனை செய்யும் என்று, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதனால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார்.

எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது என்றும் அவர் உறுயளித்தார்.

“எரிபொருட்களுக்கு விலைகளை அதிகரிப்பதற்கான ஐ.ஓ.சி. யின் தீர்மானம் தொடர்பில் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினர். ஆனால், அவ்வாறு அதிகரிக்க வேண்டாம் என்று, அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன்” என்றும் அமைச்சர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்