ரோஹிங்ய அகதிகள் விவகாரம்; பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் திருப்தியில்லை: அமைச்சர் சாகல

🕔 October 3, 2017

ல்கிசை பகுதியில் ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் பிக்குகள் உள்ளிட்ட குழுவின் குழப்பம் விளைவித்தபோது, பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் தனக்கு திருப்தியில்லை என்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை அலறி மாளிகையில் சந்தித்தபோதே, அமைச்சர் இதனைக் கூறினார்.

சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவது பொலிஸாரின் பொறுப்பு என்பதையும் இதன்போது அமைச்சர் நினைவுபடுத்தினார்.

“பொலிஸாரில் 95 வீதமானோர் தமது கடமைகளை தங்கள் ஆற்றலுக்கு உட்பட்ட வகையில் நன்றாக நிறைவேற்றுகின்றனர். ஆனால், மிகுதி 05 வீதமானோர் அரசாங்கத்தின் தவறு காரணமாக தமது கடமைகளைச் செய்வதில்லை.

அரசியல்வாதி அல்லது ஒரு தரப்பினருக்கு சார்பாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  நடந்து கொள்ளும் போது, பிரச்சினைகள் எழுகின்றன” எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்