கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

🕔 September 30, 2017

-அஹமட் –

கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாண சபையில் அட்டாளைச்சேனையிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் தேசிய காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் உள்ளனர்.

அக்கரைப்பற்றில் மு.காங்கிரசின் சார்பில் ஏ.எல். தவம் – கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.

அண்மையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமையானது, முஸ்லிம் மக்களிடையே கடுமையான ஆத்திரத்தை உண்டு பண்ணியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்