அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

🕔 September 28, 2017

ரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலறி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்டை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையில்லை. எதிர்காலத்தில் அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்.

க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் தற்போது செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்புக்களின் பின்னர், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்