கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர்

🕔 September 24, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த கிழக்கு மாகாண சபையானது, இம்மாதம் 30ஆம்திகதியுடன் கலைகிறது.

முதலாவது அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி தெரிவு செய்யப்பட்டார்.

அப்போதைய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், ஆரியவதியை தவிசாளர் பதவிக்கு முன்மொழிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அப்போதைய உறுப்பினரும், அந்தக் கட்சியின் அப்போதைய சபைக் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல் அதனை ஆமோதிருந்தார்.

இதுவரையில் கிழக்கு மாகாண சபையின் 84 அமர்வுகள் நடைபெற்றுள்ளன.  நாளை நடைபெறவுள்ள 85 ஆவது அமர்வு, இறுதி அமர்வாக அமையவுள்ளது.

இம் மாதம் 30ஆம் திகதி, சபை கலைந்தவுடன், கிழக்கு மாகாண சயைின் 37 உறுப்பினர்களும் தமது பதவிகளை இழக்கவுள்ளனர். அதன் பின்னர், சபையின் நிருவாகம் ஆளுநர் வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்