புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

🕔 September 21, 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

அரசியலமைப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 06 உபகுழுக்களின் அறிக்கைகள் மற்றும் மக்கள் கருத்தறியும் லால் விஜயநாயக்கவின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை, நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்