20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை

🕔 September 15, 2017

– முன்ஸிப் அஹமட் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கும், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதவு தெரிவித்தோருக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீரும் அவரின் பணியாளர்கள் சிலரும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட முயற்சித்தமையினால், அங்கு சிறிது நேரம் முறுகல் நிலை தோன்றியது.

அட்டாளைச்சேனை பெரிய பள்ளியில் ஜும்ஆ நிறைவடைந்ததன் பின்னர் பிரதான வீதிக்கு அருகாமையில் ஒன்று திரண்ட மக்கள்; பதாதைகள் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், கண்டனப் பேரணியில் ஈடுபட்டோர் வைத்திருந்த பதாதையினை பறிக்க முற்பட்டார். இதனால், கண்டனப் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் சுகாதார அமைச்சர் நசீருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியது.

இதனையடுத்து, அமைச்சர் நசீருடைய பாதுகாப்பு உத்தியோகத்தர், அங்கிருந்து நசீரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

அமைச்சர் நசீரும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் என்பதோடு, கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக அமைச்சர் நசீர் வாக்களித்திருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

இதேவேளை, மு.கா. தலைவர் ஹக்கீமும் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்திருக்கும் நிலையில், 20க்கு ஆதரவு தெரிவித்தோருக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்