பெருந்தொகையான பொலிஸாருக்கு, ஒரே தடவையில் பதவி உயர்வு

🕔 September 9, 2017

லங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2599 பேருக்கு, இவ்வருடம் மே மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் மா அதிபர் – பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

இவ்வாறான பெருந்தொகையினருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது, அண்மைக் காலத்தில் இதுவே முதல் தடயாகும் என்று, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பொலிஸ் கொன்ட்டபிள் 2075 பேர் பொலிஸ் சார்ஜன்ட் தரத்துக்கும், 189 சார்ஜன் தரத்தையுடையவர்கள் உப பொலிஸ் பரிசோதர்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளர்.

இதேவேளை, பெண் பொலிஸ் சார்ஜன்ட் 34 பேர் – உப பொலிஸ் பரிசோதகர்களா பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதிகள் 292 பேர் – சார்ஜன்ட் சாரதிகளாகவும், சார்ஜன்ட் சாரதிகள் 09 பேர் – போக்குவரத்து உப பரிசோதகர்களாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே இந்த வாரம் 177 பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்