ஊழல் செய்யும் அரச பணியாளர்களுக்கு, ‘சில்’ துணி மோசடி வழக்குத் தீர்ப்பு கடுமையான செய்தியாகும்

🕔 September 7, 2017

சில்’ துணி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; ஊழல் புரிகின்ற மற்றும் ஊழலை மூடி மறைக்கின்ற அரச பணியாளர்களுக்கு உறுதியானதொரு செய்தியைக் கூறியுள்ளது என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே)  நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையினை நிலைநாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது பாராட்டினையும் அவர் வெளிப்படுத்திள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு ‘சில்’ துணி விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில், கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள அறிக்கையொன்றியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

‘சில்’ துணி மோசடி தொடர்பில் போராடிய அனைவருக்கும் நன்றிகள்.

குறிப்பாக, ‘சில்’ துணி விவகாரத்தில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து போராடிய தேர்தல்கள் திணைக்களம், பெப்ரல் அமைப்பு, தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம், ஊழலுக்கு எதிரான செயலகத்தை சேர்ந்த துசித முதலிகே, வசந்த சமரசிங்க (ஜே.வி.பி) உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அதேபோன்ற நீதித்துறையில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையினை நிலைக்கச் செய்த நீதிபதி ஜிஹான் குலதுங்கவுக்கும் எனது பாராட்டைத் தெரிவிக்கின்றேன்.

தொடர்பான செய்தி: முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்