கிராமத்தான் கலீபாவின் ‘நோக்காடு’ அறிமுக நிகழ்வு; ஞாயிறன்று கொழும்பில்

🕔 September 7, 2017

டகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் நோக்காடு கவிதை நூலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் இரண்டாவது கவிதை நூலான நோக்காடு அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00மணிக்கு மருதானை தெமடகொட வீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.

தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ் கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சகோதரர் ஏ.எம். அப்துல் மஜீத் கலந்துகொள்கிறார்.

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சாமிலா முஸ்டீன், பன்னூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன், வசந்தம் தொலைக்காட்சி முஷர்ரப்,, கலாபூசணம் என். நஜ்முல் ஹுசைன், எங்கள் தேசம் லரீப் சுலைமான் மற்றும் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீர் ஆகியோரும் இந் நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ளனர்.

நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

மேற்படி நூலின் வெளியீட்டுவிழா, அண்மையில் பொத்துவிலில் இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்