வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

🕔 August 24, 2017

நாட்டினுடைய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமை தொடர்பில், தான் வெட்கப்படுவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் ஏனைய நீதியமைச்சர்கள், நீதித்துறை மீது அழுத்தம் செழுத்தியதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு அழுத்தம் செலுத்தவில்லை என்பதே, தன் மீதான குற்றச்சாட்டாகும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பட்ட பின்னர்,நேற்று புதன்கிழமை  அமைச்சிலிருந்து வெளியேறிய விஜேதாஸ ராஜபக்ஷ, ஊடகங்களிடம் பேசியபோதே, மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

“வரலாற்றில் அனைத்து நீதியமைச்சர்களுக்கும் எதிராக இருந்த குற்றச்சாட்டு, அவர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் பிரயோகித்தார்கள் என்பதாகும்.

எனினும், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கோ நீதிமன்றத்துக்கோ அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்பதுதான், என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

மத்திய வங்கி பிணைமுறி போன்ற பெரிய மோசடிகள் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மூலம், பிரதான சூத்திரதாரிகள் தொடர்பாக தகவல்கள் வௌியாகிக் கொண்டிருப்பதால், அவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் எனக்கு சம்பந்தம் இருந்ததாக பிரசாரம் செய்து, என்னை பலி கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

நான் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. என்னை பதவி நீக்கியுள்ளனர். எனது பாதையை வரும் நாட்களில் வௌிப்படுத்துவேன். அதுவரை சுயாதீனமாக செயற்படுவேன்”  என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்