நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

🕔 July 24, 2015

Sajith - 032 அஸ்ரப் ஏ. சமத் –

நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டையில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில், நேற்று  வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

“எனது 48 ஆவது பிறந்த தினத்தின்போது, எனக்குக் கிடைத்த பெரிய பரிசு, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுப் பதவியாகும்.

இந்தப் பதவி மூலமாக, இலங்கை பூராகவும் இருக்கின்ற வறிய மக்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காகவும், நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்காகவும், பல்வேறு செயல் திட்டங்களை நான் முன்வைத்துள்ளேன்.

பதினைந்தாயிரம் கிராமங்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் எனும் செயற்பாட்டின் ஊடாக, ஒவ்வொரு கிராமத்திலும் ஓர் அபிவிருத்தி திட்டத்திற்கு, பத்து லட்சம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது. அதே போல, இஸ்லாமிய மத வழிப்பாட்டுத் தலங்களை வளப்படுத்துவதற்காக, பண ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் பல உதவிகளை வழங்கியுள்ளேன்.

ஹம்பாந்தோட்டை மக்களுக்காகவும், இஸ்லாமிய சமூகத்திற்காகவும், அனைத்து இலங்கை மக்களுக்காகவும், அவர்களின் கிராமங்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன்.

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், நீங்கள் எனக்குப் பெற்றுத்தரும் பலத்தினை அடிப்படையாகவும் ஆசிர்வாதமாகவும் கொண்டு, உங்களை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு, என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன்” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்