கரடி தாக்கியதில், தேன் எடுக்கச் சென்றவர் படுகாயம்

🕔 July 27, 2017

– எப். முபாரக் –

தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற நபயொருவரை கரடி தாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வெவ காட்டுப்பகுதியில் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளான நபர், பலத்த காயகளுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய எல்.டபிள்யு. சோமரத்தின பண்டா என்பவரே கரடித் தாக்குதலுக்குள்ளானார்.

குறித்த நபர் நேற்று காட்டுக்குள் தேன் எடுக்கச் சென்ற போது, மரப்பொந்துக்குள் தேன் இருப்பதை இனங்கண்டுள்ளார். இதனையடுத்து மரத்தினை வெட்டிய போது திடிரென கரயொன்று மரப்பொந்துக்குள் இருந்து வெளியேறி தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்பு குறித்த நபரை காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்ற சிலர் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்