புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமில்லை; ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

🕔 July 26, 2017

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இதுவரை பாரதூரமான தாக்குதல்களில் ஈடுபட்டதாக, அந்த அமைப்புக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என, குறித்த நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தாக்குதலையடுத்து, கடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பு தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், 2006ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இணைக்கப்பட்டது.

இதேவேளை, 2003ம் ஆண்டு இப்பட்டியலில் இணைக்கப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் பெயர் தொடர்ந்தும் இருந்து வருகிறது.

13 நபர்களையும், 22 அமைப்புக்களையும் தனது பயங்கரவாதப் பட்டியலில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடக்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்