அத்தியவசியமாக்கப்பட்டது எரிபொருள் சேவை; பணிக்கு திரும்பாத பகிஷ்கரிப்பாளர்களின் வேலை பறிபோகும்: அரசாங்கம் அறிவிப்பு

🕔 July 26, 2017

ரிபொருளை களஞ்சியப்படுத்துதல் மற்றும் வினியோகித்தல் ஆகியவற்றினை கட்டாய சேவைகளாக அறிவித்து, நேற்று செவ்வாய்கிழமை இரவு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பணிக்குத் திரும்பத் தவறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், அவர்களின் வேலையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொலனாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியசாலைகளின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, முப்படையினரும் பொலிஸாரும் அங்கு சென்றுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்