சீனியுடன் வந்த கொகெய்ன்; அமைச்சர் றிசாத் மீதும் சந்தேகமுள்ளது, அவர் பதவி விலக வேண்டும்: ஆனந்த சாகர தேரர்

🕔 July 21, 2017

மைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என, பஹியங்கல ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தியுள்ளார்.

சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனிலிருந்து 218 கிலோகிராம் கொகெய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“குறித்த சம்பவம் தொடர்பில் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக, விசாரணைகளை நடத்துவம் பொருட்டு, அமைச்சர் பதவி விலக வேண்டும். மேலும் மீட்கப்பட்டுள்ள கொகெய்ன் போதைப்பொருள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதும் எமக்கு சந்தேகம் உள்ளது” என்று, தேரர் குறிப்பிட்டார்.

இப்படி நான் கூறுவதால், எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தாலும் பிரச்சினை இல்லை. நான் கொலை செய்யப்பட்டாலும், உலகுக்கு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்” என பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேற்படி தேரர் தொடர்ச்சியாகச் சுமத்தி வருகின்றார்.

சில காலங்களுக்கு முன்னர் ‘ஹிரு’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘பலய’ எனும் நேரடி அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேரர், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் விவாதமொன்றில் ஈடுபட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

வில்பத்துக் காட்டை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழித்து வருகிறார் எனக் குற்றம்சாட்டியிருந்த தேரர், அந்த நிகழ்ச்சியில் அதனை நிரூபிக்க முடியாமல், றிசாத் பதியுதீனிடம் தோற்றுப் போனமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்