சீனியுடன் வந்த கொகெய்ன் விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது

🕔 July 20, 2017

தொச நிறுவனத்துக்காகக் கொண்டு வரப்பட்ட சீனியடங்கிய கொள்கலனில் இருந்து கைப்பற்றப்பட்ட கொகெய்ன் 3.2 பில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சதொச நிறுவனத்துக்காக பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியடங்கிய கொளகலனிலிருந்து 218 கிலோகிராம் எடையுடைய கொகெய்ன் போதைப் பொருளை, நேற்று புதன்கிழமை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

ரத்மலானயிலுள்ள சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான களஞ்சியத்துக்கு, மேற்படி கொள்கலன் கொண்டு வரப்பட்ட நிலையில், குறித்த கொகெய்ன் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்ட போதே, பொலிஸ் பேச்சாளர் இந்த விடயங்களைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்விவகாரம் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

புதிது பேஸ்புக் பக்கம்