இரட்டைக் குடியுரிமையுள்ளோர் ஒன்றரை லட்சம்; வாக்காளர் டாப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்படும்

🕔 July 12, 2017

நாட்டில் 143,902 வாக்காளர்கள், இரட்டைக் குடியுரியினைக் கொண்டுள்ளனர் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து, இந்தத் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் 22ஆயிரத்து 953 வாக்காளர்கள் இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் 5697 வாக்காளர்களும், வன்னியில் 3748 வாக்காளர்களும் இரட்டைக் குடியுரிமையுடைவர்களாக உள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி, இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்களின் பெயர்கள், வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கப்படுமெனவும், ஆணைக்குழு கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்