முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

🕔 July 7, 2017

முப்பத்து ஐந்து வயதுக்குக் குறைவான நபர்களுக்கு, முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தடை செய்யும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்துக்கான வரைபுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

“முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு, அதிக இளைஞர்கள் வருகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்தி, இளைஞர்கள் மத்தியில் வேறு தொழிற் திறனை ஊக்குவிப்பதற்காகவே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” எனவும், அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 08 இலட்சத்துக்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்