ஆளுநர் பதவி கிடைக்காத ஏமாற்றம்; தூதுவர் பதவி வேண்டாம் என்கிறார் லியனகே

🕔 July 5, 2017

ட்டாருக்கான இலங்கைத் தூதுவரும், கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநர் பதவியினை எதிர்பார்த்திருந்தவருமான ஏ.எஸ்.பி. லியனகே, மிகவும் ஏமாந்த நிலையில், தனது பதவியினை ராஜிநாமாச் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரின் பீக்கொக் மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

பிரபல வர்த்தகரான இவர், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடக சந்திப்பின் போது, அவர் மேலும் கூறுகையில்;

“ஆளுநருக்கான பதவி வெற்றிடம் ஏற்படும் போது, அதற்கு என்னை நியமிப்பதாக ஜனாதிபதி எனக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார். ஆனால், அதனை அவர் நிறைவேற்றவில்லை.

அண்மையில் வெற்றிடமான கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு தான் நியமிக்கப்படாமை தொடர்பில் ஏமாற்றம் தெரிவித்த லியனகே மேலும் கூறுகையில்; அந்தப் பதவிக்கு அடுத்ததாக ஜனாதிபதி என்னை நியமிப்பார் என்று, நாம் மிகவும் எதிர்பார்த்தேன் என்றார்.

“ஜனாதிபதியை நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால், நான் மிகவும் ஏமாந்து போயுள்ளேன். எனது கட்சி எப்போதும் ஜனாதிபதியுடனேயே இருக்கும். மேலும், அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் இருப்பேன். அரசாங்கத்தக்கு சங்கடம் கொடுக்க நான் விரும்பவில்லை. ஆனால், விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, எனது ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதோடு, எனக்கு ஆரம்பத்தில் வழங்கிய உறுதிமொழிக்கிணங்க அந்தப் பதவியை வழங்வார் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

தொடர்பான செய்தி: மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்