ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

🕔 June 30, 2017

னாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன், ஜனாதிபதி செயலாளராக பி.பி. அபேகோன் நியமிக்கப்பட்டார்

இதற்கு முன்னதாக, பி.பி. அபேகோன் – பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர் என்பவை அவற்றில் சிலவாகும்.

Comments