நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர்

🕔 June 29, 2017

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் அதிகார சபை தொடர்ச்சியாக செயற்படுவதென்றால், நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நீருக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை என, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மக்களின் அத்தியவசியத் தேவைகளில் ஒன்றான, நீருக்குரிய கட்டணத்தை அதிகரிகரிப்பதற்கு, நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தியவசியத் தேவைகளில் ஒன்றான நீரினை, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கான உபாயங்களை வகுக்க முடியாத அமைச்சர் ரஊப் ஹக்கீம், நீருக்காக மக்களிடமிருந்து அதிக கட்டணங்களைப் பெற முயற்சிக்கின்றமை தொடர்பில், பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வருகின்றன.

Comments