வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

🕔 June 28, 2017

ள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது சாத்தியம் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மேற்படி மூன்று மாகாண சபைகளினதும் ஆட்சிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் முடிவடைகின்றன. மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து 07 நாட்களுக்குள், தேர்தல் பற்றிய அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்க வேண்டும். அந்த வகையில்,  ஒக்டோபர் 02 ஆம் திகதி தேர்தல் பற்றி அறிவிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்