இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம்

🕔 June 27, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த விஜயத்தை ரத்துச் செய்யுமாறு, பாகிஸ்தானிடம் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவிடம் பாகிஸ்தான் அரசாங்கத் தரப்பு, இந்த விடயத்தை எத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் மேற்டி விஜயம் திட்டமிட்டபடி நிறைவேறியிருந்தது.

இதன்போது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு, பாகிஸ்தான் பின்நிற்கப்போவதில்லை என்று, அந்த நாட்டு  ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானில், அந்த நாட்டு ஜனாதிபதி மம்னூன் ஹுசைனை, மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் மேற்படி விஜயத்தை ரத்துச் செய்யுமாறு, பாகிஸ்தானிடம் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் கோரிக்கை விடுத்ததாக, மஹிந்த ராஜபக்ஷவிடம பாகிஸ்தான் அரசாங்கத் தரப்பு  எத்தி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனவாத குழுக்களை ஏவி விட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சில மேற்குலக  சக்திகள்தோற்கடித்துவிட்டதாக, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காவி தீவிரவாத  மோடி அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் நெருக்கமான உறவு வைத்துள்ளது. கடந்த ஆட்சி மாற்றத்தில் நல்லாட்சிக்கு இந்தியா நிதி மற்றும் இதர உதவிகளை  அளித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளமை  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது . 

(ஒன்றிணைந்த எதிரணியினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்