சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார்

🕔 June 26, 2017

– எம்.வை. அமீர்-

சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கான கடிதத்தினை,  அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவரிடம் இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார்.

சாய்ந்மருதுக்கான வீட்டுத் தேவையை நிறைவேற்றித தருமாறு, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா, அண்மையில் கலாநிதி ஜெமீலிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.

இதனையடுத்து, அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்துக்கு இந்தக் கோரிக்கையினைக் கொண்டு சென்ற ஜெமீல், 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான இணக்கத்தினை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க கோரிய, அமைச்சரின் கடிதத்தை கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

அமைச்சரின் சார்பில் குறித்த கடிதத்தை கலாநிதி ஏ.எம். ஜெமீல், பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபாவிடம் கையளித்தார். குறித்த கடிதத்தில் 50 வீடுகளையும் நிர்மானிப்பதற்கான காணி மற்றும் வீடுகள் தேவைப்படுபவர்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

இங்கு பேசிய பள்ளிவாசல் தலைவர் ஹனிபா; பள்ளி நிருவாகத்துடன் பேசி அதற்கான தகவல்களைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

தாம் 100 வீடுகள் தேவை என்று கேட்டிருந்த நிலையில், அவற்றில் 50 வீடுகளை அமைத்துக் கொடுக்க அமைச்சர் ஒத்துக்கொண்டமை குறித்து மகிழச்சி தெரிவித்த பள்ளிவாசல் தலைவர்; வீடுகளற்ற திருமண வயதுள்ள பெண்களைக்கொண்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு, குறித்த வீடுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்