பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை

🕔 June 10, 2017
– பாறுக் ஷிஹான் –

பேஸ்புக் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி, 30 லட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில், 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பிலிருந்து இயங்கும் வானொலி நிலையமொன்றில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருக்கே, சாவகச்சேரி நீதவான்  நீதிமன்றம் இவ்வாறு பிணை உத்தரவினை வழங்கியது.

30 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று ஆட்பிணை மற்றும் 30 லட்சம் ரூபா பெறுமதியான காணி ஒன்றின் பிணை ஆகியவற்றில் செல்ல, இவருக்கு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அனுமதியளித்தார்.

சந்தே நபர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும், இதன்போது நீதவான் கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த நபர் தென்மராட்சிப் பகுதியியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பேஸ்புக் ஊடக பழகி, அவரிடம் இருந்து சுமார் 30 லட்சம் ரூபா வரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஆயினும், பின்னர் அந்தப் பெண்ணுடனான தொடர்புளை அவர் துண்டித்துள்ளார். குறித்த நபரின் கைத்தாலைபேசி மற்றும் வானொலி நிலைய தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்த போதெல்லாம் அவற்றைத் துண்டித்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட யுவுதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த வாரம் குருநாகல் பகுதியில் வைத்து அறிவிப்பாளர்  கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எவ்வாறாயினும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பாளரை கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிவான் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்