சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம்

🕔 June 8, 2017

லங்கையில் சூறாவளி அல்லது சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, இவை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்தத் திணைக்களம் கோரியுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வான்பரப்பில் திடீரென பாரியளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை தோன்றியமையினை அடுத்து, சுனாமி ஏற்படலாமென்கிற அச்சம் மக்களிடையே பரவியது.

பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் வானில் இந்த மாற்றம் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து கடும் காற்றுடனான மழையும் பெய்துள்ளது.

இதனால், சுனாமி ஏற்படலாமென கதைகள் பரவியது.

இந்த நிலையிலேயே, வளிமண்டலவியல் திணைக்களம் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்