அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி

🕔 June 5, 2017

ரத்தினபுரி தொகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் இந்து கோவில்களின் புனரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில் ஆகியவற்றுக்கு சென்றார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டதோடு, அவர்களுக்கு நிவாரண உதவிகளையும், வீட்டுப் பாவனைக்கு தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இரத்தினபுரி ஸ்ரீ சுமணா ராம  விகாரை, ஸ்ரீ போதிராஜாராம விகாரை, இரட்ணேஸ்வரம் சிவன் கோவில், மஸ்ஜிதுல் ஜன்னா முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் கொடிகமுவ பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து, விகாராதிபதிகளிடமும் தர்மகர்த்தாக்களிடமும் நிதியை வழங்கினார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அனர்த்த நிவாரண உயர்மட்ட கூட்டத்தின் பின்னர், கஜூகஸ்வத்த விகாராதிபதியிடமும் புனரமைப்புக்கான நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் இந்த பிரதேசத்தில் 119 வீடுகள் முற்றாக சேதமடைந்தும், 1319 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தும் உள்ளன.

“முற்றாக சேதமைந்த வீடுகளை மீள நிர்மாணிப்பதற்கு 25 லட்சம் ரூபாவினையும்பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக” இதன்போது,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்