பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய்

🕔 July 13, 2015

Kuwait Dinar
கு
வைத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை, அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்து விசாரித்ததில், அந்நபரின் வங்கிக் கணக்கில் 05 லட்சம் குவைத் டினாருக்கும் அதிகமான தொகை (இலங்கை நாணயத்தில் 20 கோடி ரூபாய்) வைப்பிலிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர் வெளிநாட்டினைச் சேர்ந்தவராவார். குவைத் நகரப் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, இவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பள்ளிவாசலுக்கு அருகில், குறித்த மனிதர் நின்று கொண்டு, தனக்கு வசிப்பதற்கு வீடில்லை எனக் கூறி, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தமையினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோதே, அவருக்கு – குவைத் நாட்டில் வங்கிக் கணக்கொன்று இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது. மேலும், குறித்த வங்கிக் கணக்கில் 05 லட்சத்துக்கும் அதிகமான குவைத் டினார் வைப்பிலிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவலும் அம்பலமாகியுள்ளது.

குவைத் நாட்டில் பிச்சை எடுத்தல் தடைசெய்ய்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும், தற்போது ரமழான் மாதம் என்பதால், அங்குள்ள மக்கள் – தான தர்மம் வழங்குவதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இதனை சாதகமாகக் கொண்டு, இந்த மாதத்தில் பிச்சைக்காரர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

குவைத்தில் பிச்சையெடுத்த 22 நபர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஆசிய நாட்டவர்களும் உள்ளடங்குவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்