இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு

🕔 May 10, 2017

நாடளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே, கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய தீர்ப்பினையே, ஏனைய எட்டு பேருக்கும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, இந்த விடயங்களை அவர் கூறினார்.

தகவலறியும் உரிமைச் சட்ட மூலத்தின் கீழ், இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ள குறித்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் உறுதிப்படுத்துவதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு விண்ணப்பமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் கம்மன்பில இதன்போது கூறினார்.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரம், ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்