மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி

🕔 May 7, 2017
– பாறுக் ஷிஹான் –

மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள  மியான்மார் அகதிகளை  நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் சபீக் றஜாப்தீன் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான உதவிகளையும் வழங்கினார்.

கடலில் சிறிய படகொன்றில் பயணித்த போது, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மேற்படி மியன்மார் நாட்டு அகதிகள், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கிணங்க, மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அகதிகள் முஸ்லிம்கள் என்பதனால், எதிர்வரும் ரமழான் நோன்பினை நோற்பதற்குத் தேவையான பொருட்களை சபீக் றஜாப்தீன் வழங்கியதோடு, தொழுகைக்கான பாய்கள் மற்றும் அத்தியவசியமான பொருட்களையும் வழங்கி வைத்தார்.

கடலில் காப்பாற்றப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட மியன்மார் நாட்டவர்களில்    07பெண்களும் ஆண்கள் 07 பேரும்,   குழந்தைகள் மற்றும்  சிறுவர்கள் 16 பேரும் உள்ளனர்.

இதேவேளை, குறித்த குழந்தைகள்  மற்றும் பெண்களுக்கு  துணிகள், நுளம்பு வலைகள் மற்றும் பால் மா போன்றவை தேவையாக உள்ளன.

இதனை உதவியாக வழங்க விருப்பவர்கள் தனது தொலைபேசி இலக்கமான 0773910090 எனும் எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு சபீக் ரஜாப்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்