‘ஜெ’: மீண்டும் முதல்வரானார்

🕔 May 24, 2015

Jeyalalitha - 02மிழக முதல்வராக  அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா ஜெயராம், நேற்று சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதன்போது, ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஜெயலலிதா பதவியேற்றமையினைத் தொடர்ந்து, 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல்வர் பதவியை இழந்தார்.

இதையடுத்து, புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

இந்த நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.

மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட் 04 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தார்.

இந்தத் தீர்ப்பையடுத்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின.

இதனையடுத்து, நேற்றைய தினம் –  ஜெயலிதா ஜெயராம் பதவியேற்றுக் கொண்டார்.

இதுவரை, ஜெயலலிதா – தமிழக முதல்வராக 05 தடவைகள் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்