கீதாவுக்கு வழங்கப்பட்ட வாகன வரிச் சலுகையை மீளப் பெற வேண்டும்: கபே வேண்டுகோள்

🕔 May 4, 2017

ரிச் சலுகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை, அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ‘கபே’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சபா நாயகர் மற்றும் திரைசேரி செயலாளர்  ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றின் மூலம், இந்தக் கோரிக்கையை கபே முன்வைத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு, கீதா தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே அவர்கள் இந்தக் கடிதத்தினை அனுப்பியுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு அரசாங்கம் வரி விலக்களித்து வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது.

இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வறுமானம் இழக்கப்பட்டுள்ளதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, முடிந்தளவு விரைவாக, கீதாவின் வாகனங்களுக்கான அரச வரிப் பணம் மற்றும் அதற்கு செலவான மேலதிகக் கட்டணங்களை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, கவே அமைப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்