ரஷ்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு

🕔 May 2, 2017

ஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 01,02, மற்றம் 03ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர்  அலெக்ஸாண்டர் கார்ச்சேவ், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த அழைப்பினை விடுத்தார்.

ரஷ்யத் தூதுவருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான இந்த சந்திப்பின் போது, இலங்கை – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பரஸ்பர வர்த்தகம் தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்