மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது

🕔 April 6, 2017

ரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 03 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறினார் எனும் குற்றச்சாட்டில் துமிந்த சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றத்தை துமிந்த சில்வா ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு 03 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக, துமிந்த சில்வா இன்று அம்பியூலன்ஸ் வண்டியில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜர்ப்படுத்தும் பொருட்டு, துமிந்த சில்வாவை சிறை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

சொத்து விபரங்களை துமிந்த சில்வா வெளியிடவில்லை என, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2011, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த துமிந்த சில்வா, தனது அசையும் அசையா சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில் லஞ்ச, ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு மேற்படி வழக்கை தாக்கல் செய்தது.

துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, அவருக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

அபாரத தொகையை செலுத்த தவறினால், இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்