பசீரும், சபீக் ரஜாப்தீனும்; மு.கா.வின் கண்ணில் படாத மதுக் கோப்பையும்

🕔 March 23, 2017

 

– இப்றாஹீம் மன்சூர்(கிண்ணியா) –

மைச்சர் ஹக்கீமை விமர்சித்தமையினால், மு.காவின் முன்னாள் தவிசாளர் பசீர்சேதாவூத்துக் எதிராக, மு.காவினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.

இதன் போது பசீர் முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை. அவர் தன்னுடைய குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அறிக்கை விட்டார். அவரை விசாரித்தால் புதருக்குள் ஒளிந்து கிடக்கும் நச்சுப் பாம்புகள் வெளியேறி, மு.காவிலுள்ள பலரை தீண்டி விடலாம் என்கிற அச்சத்தினால், பசீரை விசாரிக்க மு.கா முன் வரவில்லை.

கடந்த சில நாட்களாக மு.காவின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் மது அருந்தும் தோரணையுடனான புகைப்படமொன்று உலா வருகிறது. இந்த புகைப்படத்தில் மதுபான போத்தல் இருந்தாலும், அவர் அருந்துவது குளிர் பானம்தான் என்ற வாதத்தினை சிலர் முன் வைக்கின்றமையினை அவதானிக்க முடிகிறது. இதிலுள்ள உண்மை என்வென்று, சபீக்கை விசாரிக்கும் வரை, யாராலும் கூற முடியாது.

குர்ஆன் ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தேசிய அமைப்பாளர், குடிகாரர்களுடன் உலா வருவதொன்றும் பெருமையான விடயமல்ல. அது – மு.காவின் போராளிகளுக்கு பெரியதொரு குற்றமாகவும் தெரியவில்லை. அவர் அருந்துவது மதுவல்லாமல் இருந்தாலும் அது குற்றம்தான். இந்தப் புகைப்படம், சபீக் ரஜாப்தீன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டதாகும். அவருக்கு மது அருந்துபவர்களுடன் கூடித் திரிவது ஒரு இழிவான செயலாக விளங்கவே இல்லை என்பது கவனத்திற் கொள்ளத்தக்க முக்கிய விடயமாகும்.

இது தொடர்பில் பரவலாக பேசப்படுகின்ற போதும் மு.காவின் உயர் மட்டம் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அமைச்சர் ஹக்கீம் பற்றி ஏதாவது பேசப்பட்டிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை விடவும் ஹக்கீம் பெரிதாக தெரிவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தயவு செய்து இவ்வாறானவர்கள் தங்களை ஒரு முறை சுய விசாரணை செய்து கொள்தல் அவசியமாகும்.

இது தொடர்பில் ஒரு போதும்  மு.காவின் உயர்பீடத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. மது அருந்துவதற்கெல்லாம்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போனால், கட்சியின் தலைவர் கூட தப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதாகுமு்.

இதனை விட பாரிய குற்றச் செயல்களை மு.காவின் தற்போதைய தலைவர் செய்துவிட்டு அதனைஉயர்பீடக் கூட்டத்தில் வைத்து ஏற்றுக்கொண்டு அப்பாவி போன்று உலா வருகிறார். குர்ஆன், ஹதீதை யாப்பாக கொண்ட கட்சியின் தலைவர் இவ்வாறு இருக்கும் போது, அதன் தேசிய அமைப்பாளரை பள்ளிக்கு கல் வைப்பவராக எதிர்பார்க்க முடியாது.

இதனையும் நியாயப்படுத்துபவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா என்பதுதான் சந்தேகமானதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்