பேராளர் மாநாட்டு மோசடிகள்: மு.கா. தலைவரின் போலி முகம்; கிழியும் முகத்திரை – 02

🕔 February 3, 2017

Hakeem-648– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேராளர் மாநாடு தொடர்பில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. இன்னொருபுறம் குறித்த திகதியில் பேராளர் மாநாடு நடைபெறுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க கடந்த பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற மோசடிகளும், சூழ்ச்சிகளும் இந்தப் பேராளர் மாநாட்டிலும் இடம்பெறுமா எனவும் கட்சியின் விசுவாசிகள் அச்சப்படுகின்றனர்.

இறுதியாக நடைபெற்ற பேராளர் மாநாட்டில், உயர்பீடத்துக்கான செயலாளர் ஒருவரை புதிதாக உருவாக்கி விட்டு, அந்தப் பதவிக்காக மன்சூர் ஏ. காதர் என்பவரை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்திருந்தார்.

பின்னர், கட்சியின் அதிகாரமுள்ள செயலாளராக மன்சூர் ஏ. காதர் தெரிவு செய்யப்பட்டதாக, தேர்தல் ஆணையாளருக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மோசடியாக அறிவித்து, ஹசனலியின் அதிகாரங்களைக களவாடிய கதையெல்லாம் அறிவோம்.

மேற்படி சூழ்ச்சியை நடத்தி முடிப்பதற்காக, கடந்த பேராளர் மாநாட்டில்மிக மோசமானதொரு மோசடி அரங்கேற்றப்பட்டது.  உயர்பீட செயலாளர் தொடர்பில் தமிழில் அறிவிக்கப்பட்டபோது சரியாகவும், ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட்ட போது, ஹக்கீமுடைய சூழ்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியும் அறிவிக்கப்பட்டது.

ஹக்கீமுடைய இந்த மோசடிக்கு வழமை போல், அவரின் நண்பரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். சல்மான் துணை போனார்.

இந்தச் சம்பவத்தினை இதுவரை நீங்கள் எழுத்துக்களில்தான் படித்திருப்பீர்கள். இப்போது, அந்த சூழ்ச்சியினை வீடியோ வடிவில் நீங்கள் காணலாம்.

இதுவரை, எந்தவொரு இணைய ஊடகத்திலும் வெளிவராத அந்த பேராளர் மாநாட்டு மோசடியினை ‘புதிது’ செய்தித்தளம் உங்களுக்கு வழங்குகிறது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்