இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

🕔 January 11, 2017

gsp-plus-014ரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு, ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளது.

இதேவேளை  இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்க வேண்டுமாயின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், ஐரோப்பிய நாடாளுமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனை நடைமுறைப்படுத்த சுமார் நான்கு மாத காலம் எடுக்கும் என, ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தைத்த ஆடைகள் மற்றும் மீன் உற்பத்திகள் உட்பட இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களுக்கு, ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூலம் ஐரோப்பிய நாடுகள் 66 வீத வரியை அறவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்த பின்னர், இவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதுடன், இந்த பொருட்கள் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்