கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு

🕔 October 30, 2016
human-books-033– எம்.எம். ஜபீர் –
‘கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்’ எனும்   தொனிப்பொருளில், ‘மனித நூற்கள்’ எனும் கருத்தாடல் நிகழ்வொன்று, சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இலங்கை நூலக சங்கத்தின் தலைவர் கலாநிதி பிரதீபா விஜயதுங்கவின் வழிகாட்டலில் giz  நிறுவனம்,  இலங்கை நூலக சங்கத்துடன் இணைந்து  இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எம். பாசில், ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர் யூ.எல். அலியார், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி. சகாதேவராஜா, டொக்டர் எம். காலித் (யூனானி வைத்தியர்), ஊடகவியலாளர் இர்பான் மௌலானா, ஜோதிராஜா கருணேந்திரா, கலைஞர் செசிலியா இந் நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ. சலீம், இலங்கை நூலக சங்கத்தின் சார்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌசர், giz நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ஆர். சிவதர்சன், சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் நூலககர் ஐ.எல்.எம். ஹனீபா, நிகழ்ச்சி திட்டத்தின் இணைப்பாளரும் நூலகருமான ஏ.எல்.எம். முஸ்தாக் ஆகியோருடன் வாசகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது வளவாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.human-books-022 human-books-044

Comments

புதிது பேஸ்புக் பக்கம்