உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) திரைப்படத்தின் ட்ரைலர்

🕔 October 21, 2016

silence-in-the-courts-987நீதிமன்றில் மௌனம்  என்று தமிழில் அர்த்தப்படும் ‘உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு, நீதிமன்றம் விதித்திருந்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடை இன்று வெள்ளிக்கிழமை விலக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

பெண்ணொவரை நீதவான் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதாக, இந்தத் திரைப்படத்தில் காட்சிகள் வருகின்றன..

இந்த நிலையில், குறித்த திரைப்படம் தன்னை அவமானப்படுத்துவதாக தெரிவித்து, முன்னாள் நீதவான் லெனின் ரத்னாயக்க, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், குறித்த திரைப்படத்தின் ‘ட்ரைலர்’ ஏற்கனவே வெளியாகியிருந்தது.

மேற்படி ‘ட்ரைலரில்’, மூத்த ஊடகவியலாளர் – ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன்,  ‘உசாவிய நிஹண்டாய்’ திரைப்படத்தின் கதையினுடைய பின்னணி பற்றிப் பேசுகிறார்.

‘உசாவிய நிஹண்டாய்’ திரைப்படத்தின் ‘டரைலர்’ உங்கள் பார்வைக்காக…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்