ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

🕔 October 13, 2016

 Gnanasara - 0143நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தமையின் பேரில், ஞானசார தேரர் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு – இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட  தொடர்பான வழக்கு விசாரணை, ஹோமாகம நீதவான் நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் வகையில் பேசினார் என குற்றம்சாட்டப்படுகிறது.

ஞானசார தேரருக்கு எதிரான மேற்படி வழக்கு விசாரணை, நொவம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்