400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது

🕔 June 25, 2015
Eravur mosque - 03– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு திறந்து வைக்கப்படவுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் இப் பள்ளிவாசலின் தொன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏறாவூர் நகரின் வரலாற்று சிறப்புமிக்க இப் பள்ளிவாசலானது, பாரம்பரிய கட்டமைப்பு மாறாமல், மேலதிக விஸ்தரிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

ஹிறா பௌண்டேஷன் நிதியுதவியுடனும், பள்ளிவாசல் நிருவாகத்தின் ஒத்துழைப்புடனும் இப் புனர் நிர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

400 வருடங்கள் பழமைவாய்ந்த இப் பள்ளிவாசலின் திறப்பு விழா, இன்று வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.Eravur mosque - 02Eravur mosque - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்