25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்

🕔 September 15, 2016

mahindananda-aluthgamage-2222சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே, அவர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு – 07, கின்ஸி வீதியில் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றினை மஹிந்தானந்த அளுத்கமகே கொள்வனவு செய்துள்ள நிலையில், அதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படுத்த அவர் தவறியுள்ளார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தோபர் ரொசான் என்பவரிடமிருந்து இந்த வீட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்