சு.கட்சி வருடாந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்

🕔 September 5, 2016

SLFP - 022ரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல் உள்ளிட்ட 07 தீர்மானங்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது வருடாந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சு.கட்சியின் வருடாந்தக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குருணாகலில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்காக, நேர்மையாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகளுக்காக கௌரவம் செலுத்த வேண்டும் என்பது முதலாவது தீர்மானமாகும்.

இரண்டாவது தீர்மானம், அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் நட்டமடையும் நிறுவனங்களை மீளமைத்தல் உள்ளிட்ட யோசனைகள் அடங்கியதாகும்.

மேலும், இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒன்றுதிரட்டுதல் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தல் தொடர்பான தீர்மானமும், இனங்களுக்கிடையே ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சரியான ஆட்சியை பாராட்டுவது தொடர்பில் ஒரு தீர்மானமும், வறுமை ஒழிப்பு தொடர்பான தீர்மானமும் சர்வதேச வெற்றிகளுக்காக பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து சுதந்திரக் கட்சியின் நினைவு மலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் mobile app ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்