வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு

🕔 June 23, 2015

NPC members protested - 01– பாறுக் ஷிஹான் –

ட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் – இடமாற்றப்படாமையினைக் கண்டித்து, இவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

வட மாகாண சபை மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி வைத்துக் கொண்டு, உறுப்பினர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி. லிங்கநாதனிடம், வவுனியா அரசாங்க அதிபர் அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும், அதனால்  அரசாங்க அதிபரை இடமாற்றுமாறும், வட மாகாணசபை உறுப்பினர்கள் ஏலவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆயினும், அந்தக் கோரிக்கைக்கிணங்க – அரசாங்க அதிபர் இதுவரை இடமாற்றப்படவில்லை. இதனைக் கண்டித்தே, இன்றைய தினம் – சபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வவுனியா அரச அதிபரை இடமாற்றுமாற – முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு, மாகாண சபையிலும் – இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்படி கனவ ஈர்ப்பு  போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையினால், இன்றைய தினம் நடைபெறவிருந்த மாகாணசபை அமர்வு தாமதமாகியது.

இதனையடுத்து, வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு – எதிர்வரும் ஜுலை 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. NPC members protested - 02

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்